எமது கட்சியினுடைய முன்னாள் நகரசபை உறுப்பினர் அமரர் தோழர் கோ.நடேசபிள்ளை அவர்களின் துணைவியார் ருக்குமணி அவர்கள் நேற்றிரவு காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
01.08.2022.