மக்கள் போராட்டம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் தகவல்களை பகிர்ந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. வீசா நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

7 நாட்களுக்குள் விசாரணைக்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மக்கள் போராட்டம் தொடர்பில் Kayleigh Fraser என்கிற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராமில் தகவல்களை பகிர்ந்தமைக்காக விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.