வௌ்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடுவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால்  வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொது போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டமையால், ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதி வௌ்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி, குறித்த சுற்றுநிருபம் கடந்த மே மாதம் வௌியிடப்பட்டது.

எனினும், நாட்டில் பொது போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அலுவலக சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்த சிக்கலை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவையின் போது இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.