பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார்.

அதன்பின்னர், குழுவொன்று விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

அதில், நிமல் சிறிபாலடி சில்வாவின் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. அதன்பின்னர், தன்னுடைய அமைச்சுப் பதவியை நிமல் சிறிபாலடி சில்வா ஏற்றுக்கொண்டார்.