இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 28 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more