ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது தேசிய மகாநாடு இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடி தனியார் விடுதியில் தோழர் ஆனந்தி அரங்கில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி இடம்பெற்றது.

வரவேற்புரையை கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தவராஜா மாஸ்டர் ஆற்றினார்.

அத்துடன் தலைவர் திரு. த. சித்தார்தன் அவர்களால் தோழர் கரூர் கண்ணதாசன், கட்சியின் சர்வதேச கிளை ஆலோசகர் கிருஷ்ணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அடுத்து10 ஆவது பொதுச்சபைக் கூட்ட தீர்மானங்கள் கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து

புளொட்டின் ஜெர்மன் கிளை பிரதிநிதி செ.ஜெகநாதன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவாஞானம், தமிழர் சமுக ஜனநாயக கட்சியின் செயலாளர் தி.சிறிதரன்(சுகு), தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சித் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், தோழர் கரூர் கண்ணதாசன், ஆகியோரின் உரைகளும், எமது கட்சியின் சார்பில் பொருளாளர் க.சிவநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆசிரியர் சு.காண்டீபன் அவர்களின் நன்றியுரையுடன் மகாநாடு நிறைவுபெற்றதோடு மதியபோசனம் விருந்தும் இடம்பெற்றது.

மகாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் என வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி உறுப்பினர்களும், வெளிநாட்டில் இருந்து பல பிரதிநிதிகளும், கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.