03 முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பான விடயங்கள் அவற்றில் உள்ளதாக நேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது என கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துப்படி, சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு – பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பவ்வை தொடர்பிலும் பிரதிநிதிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.