கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக நேற்று முன்தினம் மரணமெய்திய அமரர் தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20,000/= நிதியுதவி இன்று 11.08.2022 வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா கூமாங்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கழகத் தோழர்கள் இன்றுகாலை நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, அவரது துணைவியாரிடம் தோழர்கள் ஜெகநாதன், சிவபாலன், முகுந்தன், வேந்தன் ஆகியோர் மேற்படி நிதியுதவியை வழங்கியிருந்தனர்.