யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், தென்னாபிரிக்காவில் வசித்து வந்தவருமான பயஸ் அன்ரன் கிறிஸ்தோப்பர் (சுமதி மாஸ்ரர்) அவர்கள் (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக தென்னாபிரிக்காவில் மரணமெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரடைந்துள்ளோம்.

இவர் 80களின் ஆரம்பத்தில் கழகத்துடன் பணியாற்றியபோது துடிப்பான பல இளைஞர்களை அடையாளம் கண்டு விடுதலைப் பாதைக்கு அணிதிரட்டினார்.

1980 ற்கு பிற்பட்ட காலங்களில் தென்னாபிரிக்கா சென்று தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டு வந்தார்.

அவரது பிரிவுச் துயரினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.