முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுவர்கள் இல்ல வளாகத்தில், 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 53 மாணவர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்திருந்தனர்.

நிராயுதபாணிகளான சிறார்கள் மீது நடாத்தப்பட்ட இத் தாக்குதல், யுத்த காலத்தில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறலாகவே இன்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

பெற்றோர்களை இழந்த நிலையில், வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தச் சிறார்களின் மறைவுக்கு எமது அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம்.