தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய பெண் சமர்ப்பித்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

´கோட்ட கோ கம´ போராட்ட களத்தில் தான் தீவிரமாகத் செயற்பட்டதாக மனுதாரர் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்காக வழங்கப்பட்ட விசாவை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எந்தவொரு நியாயமான அடிப்படையும் இன்றி எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து செல்லுபடியற்ற ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.