யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர்,  ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிரேத   பரிசோதனையின் போது, கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை யாழில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உடனடியாக வீட்டார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.