உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில் பாரியளவில் அதிகரித்திருந்தாலும், பெரல் ஒன்றின் விலை 120 டொலரில் இருந்து 90 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.