Header image alt text

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ  ரத்னாயக்க குறிப்பிட்டார். Read more

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (24) கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பிச்சென்ற அவர், தனது ஜனாதிபதி பதவியையும் இராஜினாமாச் செய்திருந்தார். Read more

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராடும் ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும்,  பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. Read more

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொதுவான வேலைத்திட்டங்களில் தாம் அரசாங்கத்துக்கு  முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more