உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ  ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலுமொரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்காலமும் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலினூடாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.