இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது என்றும் இது நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான நமது நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளான, மூன்று நாடுகளும் பிராந்திய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என்று அந்தப்  பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைய விரும்பும் பல இலங்கையர்களுடன் மனித கடத்தலை எதிர்த்து இலங்கையும் அவுஸ்திரேலியாவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது