ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் திருகோணமலை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகன் அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் இல்லத்தில் (21/08/2022) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக, கட்சியின் ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களையும் மறைந்த கழகக் கண்மணிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகம் தொடர்பில் ஆராயப்பட்டு தெரிவுக்கு வந்தபோது மாவட்ட த்திற்கான செயலாளராக தோழர் தேவன் அவர்களும், பொருளாளராக தோழர் பகீரதன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கட்சிக்கான இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கான பொறுப்பாளர்களை அடுத்த கூட்டத்தில் தெரிவுசெய்வதெனவும், பழைய தோழர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்படுபவர்களையும் உள்ளடக்கியதாக  அந்த கூட்டத்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர் தோழர் அசோக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், புதிதாக உள்வாங்கப்பட்ட மகளிர் பிரிவு உறுப்பினர்களான ரி.சுபாசினி, வளர்மதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.