Header image alt text

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (23) மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. Read more

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் வென் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்துகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது Read more

எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read more