பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.