Header image alt text

25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

தோழர் விஜயம் அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று..

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது 27ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இது தொடர்பில் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். Read more

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மதமெலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதன்படி, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என தொற்றுநோயியல் துறையின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார். Read more

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற   இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் (24) குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.