நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதன்படி, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என தொற்றுநோயியல் துறையின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.

சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசிகளை ஏற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.