பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு வழங்கப்பட்ட  மன்னிப்பின் நிபந்தனைகளுக்கு அமைய சில விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலையான பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன்,

மன்னிப்பு நிபந்தனைகளை மீறினால், இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வரும், அதாவது மேலும் ஐந்து ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நான் முன்பு போல் பேச விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது, என்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், தம்மை விடுதலை செய்வதற்கும், அதற்காக செயற்பட்டவர்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார்.

எனக்கு ஒரு பாயும், பின்னர் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு மெத்தையும் வழங்க எதிர்க்கட்சித் தலைவர்தான் நடவடிக்கை எடுத்தார். உயர் கல்வியைத் தொடர என்னை அங்குனுகொலபெலஸ்ஸவிலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு அவர் உழைத்தார்,” என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலுடன் ஜெனிவாவுக்கு தனது வழக்கை எடுத்துச் சென்ற அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும், பக்கம் மாறப்போவதாகவும் கூறப்படுவதை நிராகரித்தார்