தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 95ஆவது பிறந்ததின நிகழ்வு (26.08.2022) காலை 9மணியளவில் வலிகாமம்-மேற்கு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக ஆரம்பமான இந் நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்தூவி அஞ்சலி செலுத்துதல் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப்பேருரை ஆற்றினார்.

நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.