எதிர்வரும் 03 நாட்களில் அனைத்து வகையான எரிபொருட்களின் மேலதிக இருப்புக்களை விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், எரிபொருள் விநியோகத்தை மீளாய்வு செய்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தரையிறங்குவதில் ஏற்பட்ட தாமதம், விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசைகள் முறையாக குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.