இலங்கைக்காக சீன தூதுவர் Qi Zhenhong இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் திட்டமிடப்பட்டிருந்த கண்டிக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு அஸ்கிரி விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong, திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கண்டிக்கு விஜமொன்றினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது

சுகயீனம் காரணமாக விஜயம் இரத்து செய்யப்பட்டதாக கண்டியில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.