இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட பல நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.