2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.9 சதவீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

37 பாடசாலை பரீட்சாத்திகள் உட்பட 49 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் தெரிவித்தது.