Header image alt text

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி அவர்களின் தலைமையில் கட்சியினுடைய தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், துணைத்தலைவர் தோழர் கேசவன் ஆகியோரின் பங்குபற்றலுடன் (27/08/2022) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் காரைதீவில் நடைபெற்றது. Read more

இலங்கை மற்றும் அமெரிக்க வர்த்தகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்வது என்பது குறித்து அமெரிக்கா – இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார். Read more

இலங்கைக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட உணவு உதவியின், 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலாவது தொகுதியானது, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக, இன்று (29) வழங்கப்பட்டது. Read more

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அவர்களில் 29 பேர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். Read more

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read more

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது. Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், Read more