ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தை மொட்டு கட்சித் தலைவர்களே வழிநடத்துகின்றனர். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.
ஆகையால் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஸ்திரமான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.