ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி அவர்களின் தலைமையில் கட்சியினுடைய தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், துணைத்தலைவர் தோழர் கேசவன் ஆகியோரின் பங்குபற்றலுடன் (27/08/2022) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் காரைதீவில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக, கட்சியின் ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களையும் மறைந்த கழகக் கண்மணிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் அம்பாறை மாவட்ட நிர்வாகம் தொடர்பில் ஆராயப்பட்டு தெரிவுக்கு வந்தபோது மாவட்டத்திற்கான செயலாளராக தோழர் கங்கா அவர்களும், பொருளாளராக தோழர் ஜப்பார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

அத்துடன் கட்சிக்கான பொத்துவில் தொகுதி அமைப்பாளராக தோழர் சரவணபவன் அவர்களும், கல்முனை தொகுதி அமைப்பாளராக தோழர் ரோசி அவர்களும், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக தோழர் கணேசன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கட்சிக்கான இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கான பொறுப்பாளர்களை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இடம்பெறவுள்ள அடுத்த கூட்டத்தில் தெரிவுசெய்வதென தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கல்முனை வடக்கு செயலகப் பிரிவின் தற்போதைய நிலை, சமூக மேம்பாடு, அபிவிருத்தி உள்ளிட்ட பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.