Header image alt text

30.08.1991 – 30.08.2022

ஈழத்து கவிஞரும், “தோழி” இதழின் ஆசிரியரும், பெண்ணிலைவாதியுமான தோழர் செல்வி (செல்வநிதி தியாகராஜா) அவர்களின் 31ம் ஆண்டு நினைவு நாள்….

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தன்னால் அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றின் முதல் மைல் கல்லை விரைவில் அடைய முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய  ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். Read more

இன்று (ஆகஸ்ட் 30) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.. இதனை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. Read more

இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளை ஒன்று கூட்டுவது முக்கியம் என்றும் டோக்கியோ கடன் வழங்குநர்களை ஒருங்கிணைக்கும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Read more