பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம்ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம், அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.