ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன இன்றுமுதல் (03) அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆணைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரால் இன்றையதினம் (03) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.