இலங்கைக்கான கடன் நிவாரண நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, பரிஸ் கிளப் (Paris Club) அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸ் கிளப் அல்லாத இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை பரிஸ் கிளப் வரவேற்றுள்ளது.

கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.