இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமது ஒன்றியம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக  ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை கிளை தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்றுமதி முறைமை, அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பசுமை உற்பத்திகளை பெற்றுகொடுக்கவும் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.