அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ள மேலவை இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, மஹரகமயில் இன்று (04) இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தலைமையிலான இந்த கூட்டணியில் பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.