ஏறாவூர் 01ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, சின்ன உப்போடை, லூர்துமாதா வீதியை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் வரதன் (ந.ராகவன்) அவர்களின் அன்புத் சகோதரியுமான திருமதி வசந்தகுமாரி விஸ்வராஜா அவர்கள் நேற்று(04.09.2022) ஞாயிற்றுக்கிழமை இயற்கையெய்தினார்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, சகோதரிக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).

குறிப்பு; அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, 08.09.2022 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தொடர்புகட்கு : ராகவன் (0776767253)