கனடா, டொரன்ரோவைச் சேர்ந்த பிரசாத் சரண்யா தம்பதியினர் தமது திருமண நாளை (28.08.2022) முன்னிட்டு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம், கிழவன்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு கிராமத்திலும் 15 கும்பங்களுக்கு மொத்தமாக 60,000 ரூபா எனும் அடிப்படையில் இரண்டு கிராமங்களுக்குமாக 120,000 ரூபாவினை வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு பயனாளிக்கும் உலருணவுப் பொதி ஒன்றும், சேட் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் உதவிகள் கட்சியின் பனிக்கன்குளம் கிராம மகளிர் அமைப்பினதும், கிழவன்குளம் கிராம மகளிர் அமைப்பினதும் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டுள்ளன.

05.09.2022 திங்கட்கிழமை அன்று இடம்பெற்ற இவ்நிகழ்வுகளில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் யூட் பிரசாத், கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், யாழ். மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், சமூக செயற்பாட்டாளர்கள் பிரியந்தன், உதயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

,