அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு எதிராகவும் சோசலிச இளைஞர் சங்கம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோர் கொழும்பில் இன்று (07) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டவர்கள், கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.