திருகோணமலை, உவர்மலையைச் சேர்ந்த அமரர்கள் சி.க.நாகலிங்கம் நா.இன்பமலர் ஆகியோரின் நினைவாக, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கிராமத்தின் கிளி/ வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலைக்கு, ஏற்கனவே சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்த பல் ஊடக எறியிற்கான ரூ 19,000.00 பெறுமதியான ஒளித்திரை ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக 05.09.2022 அன்று வழங்கப்பட்ட இவ் ஒளித்திரை, கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா. கஜதீபன் ஆகியோரால் பாடசாலை அதிபர் திரு. ஜீவரட்ணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.