இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றினார்.

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேற்று இரவு அறிவித்தது.

பிந்தையவை

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் வைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.