Header image alt text

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் தொடர்புபட்ட வகையில் நடைபெறுகின்ற தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும், அது தொடர்பில் ஆலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அந்தணர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆலயத்துடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள் ஆகியோர்க்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. Read more

11.09.1987 இல் வவுனியாவில் மரணித்த தோழர் நவநீதன் (இராஜலிங்கம் -அனந்தர்புளியங்குளம்) அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

கட்டுவன், தென்மயிலையை பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தோழர் அசோக் (பிரகஸ்பதி – பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி பரஞ்சோதி திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் நேற்று (10.09.2022) சனிக்கிழமை பிரான்ஸில் இயற்றை எய்தினார். Read more

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த எமது கட்சியின் செயற்பாட்டாளருடைய தந்தையார் அமரர் செபஸ்ரியன் ஆரோக்கியசாமி அவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவு ரூ 15,000/- தொகையினை வழங்கியுள்ளது. Read more

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது.  Read more

இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார். Read more

தேவையான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையெனின், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி எத்தகைய முறைமை வேண்டும் என்பதை பொது மக்களிடம் கேட்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர். Read more

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more