கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த எமது கட்சியின் செயற்பாட்டாளருடைய தந்தையார் அமரர் செபஸ்ரியன் ஆரோக்கியசாமி அவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவு ரூ 15,000/- தொகையினை வழங்கியுள்ளது.

கடந்த 06.09.2022 அன்று, கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் சூரி அவர்கள் அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மேற்படி உதவியையும் வழங்கியிருந்தார்.