தேவையான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையெனின், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி எத்தகைய முறைமை வேண்டும் என்பதை பொது மக்களிடம் கேட்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதை அரசியல் கட்சிகள் என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் அவர்கள் விரும்பவில்லை என்றால், முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தற்போது இலங்கை வந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவருடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.