மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள காயத்திரி சக்திபீட சைவ ஆச்சாரியார் சாம்பசிவம், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் இன்றுமாலை இடம்பெற்றது.

தற்பொழுது வடக்கு கிழக்குப் பிரதேசங்களில், திருக்கோணேஸ்வர ஆலயம் உள்ளிட்ட சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளல் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் பற்றியும் அவை பற்றி சைவ மக்களிடமும், சைவ சமய நிறுவனங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் கட்சியினுடைய துணைத்தலைவர் பொன் செல்லத்துரை, மாவட்ட அமைப்பாளர் சூட்டி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.