13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்),

நிக்ளஸ், மைக்கல்( நாவற்குடா), செல்வம் ( கணேஸ் – சந்திவெளி), ரஞ்சித்( சந்திவெளி), மணிமாறன் ( புல்லுமலை), கண்ணன் ( கல்குடா), எஸ்.ஏ.ரவி ( சந்திவெளி), ராஜன்( வல்வெட்டித்துறை), ஜெகன் (ஓமந்தை), செல்வம் ( நாகேந்திரன்- பாண்டிருப்பு), சின்னமெண்டிஸ் ( இருதயபுரம்), மைக்கல் ( மட்டக்களப்பு), பாலன் ( செங்கலடி), சாந்தன் ( வாழைச்சேனை), ஐயர் (தொண்டைமானாறு) ஆகிய தோழர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (13-09-2022) செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி மற்றும் கட்சியின் துணைத்தலைவர் பொன்.கேசவன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி, மலரஞ்சலி என்பன இடம்பெற்றன.

நினைவஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தோழர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.