Header image alt text

தோழர் சோ (குணசிங்கம் சிறீஸ்கந்தராஜா ) அவர்களின் பூதவுடல் இரண்டாம் ஒழுங்கை முதலியார்குளம் செட்டிக்குளம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் திரளான வெடிபொருட்களை இன்று (16) வெள்ளிக்கிழமை   விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். Read more

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவும் இன்று அதிகாலையும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

Read more

வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். Read more

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும்  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது. Read more

ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே Read more