அஸர்பைஜானில் ஹொராடிஸ் எல்லைப் பகுதியில் அஸர்பைஜான் அதிகாரிகளால்  நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். தோஹா மற்றும் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக அஸர்பைஜானில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைதானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அங்கிருந்து துருக்கிக்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் திட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.