அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மருதானை பகுதியில்  பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.