முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் விஸ்வமடு தேராவில் பகுதியிலும், எழுகைதீவு பகுதியிலும் உள்ள கட்சியின் மகளிர் அமைப்புக்களுடன் இன்றைய பொருளாதார நிலையில் மகளிர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கையாளுவது அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறுதல் மற்றும் விளக்கமளித்தல் தொடர்பான சந்திப்பு நேற்று(26.09.2022) திங்கட்கிழமை குறித்த இரு பிரதேசங்களிலும் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன், தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா, ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் யூட் பிரசாந், கட்சியின் மகளிர் அணிப் பொறுப்பாளர் க.சந்திரவதனி, கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் சி.மரியரோசரி(செல்வி), டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த புலம்பெயர் உறவான மு.காண்டீபன், கட்சியின் கனடா கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் தோழர் கந்தசாமி, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.சிவலிங்கம், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன், இணுவிலைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் காந்தன், ராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.